| 282 | ஓட்டு அகத்தே ஊண் ஆக உகந்தார்போலும்; ஓர் உரு ஆய்த் தோன்றி உயர்ந்தார்போலும்; நாட்டு அகத்தே நடைபலவும் நவின்றார்போலும்; ஞானப்பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்; காட்டு அகத்தே ஆடல் உடையார்போலும்; காமரங்கள் பாடித் திரிவார்போலும்; ஆட்டு அகத்தில் ஆன் ஐந்து உகந்தார்போலும் அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |