868கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண்; கலை பயிலும்
                        கருத்தன் காண்; திருத்தம் ஆகி,
மலை ஆகி, மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி, விண்
                           ஆகி, நின்றான் தான் காண்;
தலை ஆய மலை எடுத்த தகவு இலோனைத் தகர்ந்து விழ,
                        ஒரு விரலால் சாதித்து, ஆண்ட
சிலை ஆரும் மடமகள் ஓர் கூறன் தான் காண்; சிவன்
           அவன் காண் சிவபுரத்து எம் செல்வன் தானே.