| 176 | கா ஆர் சடைமுடியர்; காரோணத்தர்; கயிலாயம் மன்னினார்; பன்னும் இன்சொல் பா ஆர் பொருளாளர்; வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார்; பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர்; புரம் மூன்றும் ஒள் அழலாக் காயத் தொட்ட ஏ ஆர் சிலை மலையர்; எங்கும், தாமே;-இடைமருது மேவி இடம் கொண்டாரே. |