365காலன் உயிர் வௌவ வல்லார் தாமே; கடிது ஓடும்
                     வெள்ளை விடையார் தாமே;
கோலம் பலவும் உகப்பார் தாமே; கோள் நாகம்
                   நாண் ஆகப் பூண்டார் தாமே;
நீலம் பொலிந்த மிடற்றார் தாமே; நீள்வரையின்
                         உச்சி இருப்பார் தாமே;
பால விருத்தரும் ஆனார் தாமே பழனநகர்
                            எம்பிரானார் தாமே.