783கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே;
                 கயிலை மலையை உடையார் தாமே;
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே;
                    ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே;
பாரார் புகழப்படுவார் தாமே; பழனை
                           பதியா உடையார் தாமே;
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு
                ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.