| 108 | பின்தானும் முன்தானும் ஆனான் தன்னை, பித்தர்க்குப் பித்தனாய் நின்றான் தன்னை, நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான் தன்னை, சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை, திருப் புன்கூர் மேவிய சிவலோக(ன்)னை, நின்று ஆய நீடூர் நிலாவினானை, -நீதனேன் என்னே நான் நினையா ஆறே!. |