| 197 | வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற கருத்தானை, கருத்து அறிந்து முடிப்பான் தன்னை, தூயானை, தூ வெள்ளை ஏற்றான் தன்னை, சுடர்த் திங்கள் சடையானை, தொடர்ந்து நின்ற என் தாயானை, தவம் ஆய தன்மையானை, தலை ஆய தேவாதி தேவர்க்கு என்றும் சேயானை, -தென்கூடல்-திரு ஆலவா அய்ச் சிவன் அடியே சிந்திக்கப் பெற்றேன், நானே. |