| 289 | நன்றாக நடைபலவும் நவின்றார்போலும்; ஞானப்பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்; கொன்றாகிக் கொன்றது ஒன்று உண்டார்போலும்; கோள் அரக்கர்கோன் தலைகள் குறைத்தார்போலும்; சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார்போலும்; திசை அனைத்தும் ஆய், அனைத்தும் ஆனார்போலும்; அன்று ஆகில், ஆயிரம் பேரார்போலும்- அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே. |