| 396 | தாமரையான் தன் தலையைச் சாய்த்தான் கண்டாய்; தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டாய்; பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய்! புணர்ச்சிப் பொருள் ஆகி நின்றான் கண்டாய்; ஏ மருவு வெஞ்சிலை ஒன்று ஏந்தி கண்டாய்; இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய்; மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன் தானே. |