480ஊனவன் காண், உடல் தனக்கு ஓர் உயிர் ஆனான் காண்,
   உள்ளவன் காண், இல்லவன் காண், உமையாட்கு என்றும்
தேன் அவன் காண், திரு அவன் காண், திசை ஆனான்
     காண், தீர்த்தன் காண், பார்த்தன் தன் பணியைக் கண்ட
கானவன் காண், கடல் அவன் காண், மலை ஆனான்
             காண், களியானை ஈர் உரிவை கதறப் போர்த்த
வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி
           வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே.