| 561 | உண்ணாது உறங்காது இருந்தாய், போற்றி! ஓதாதே வேதம் உணர்ந்தாய், போற்றி! எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி! இறை விரலால் வைத்து உகந்த ஈசா, போற்றி! பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய், போற்றி! பண்டே என் சிந்தை புகுந்தாய், போற்றி! கண் ஆய் உலகுக்கு நின்றாய், போற்றி! கயிலை மலையானே, போற்றி போற்றி!. |