6.90 திருக்கஞ்சனூர் திருத்தாண்டகம் |
| 888 | மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை, மூன்று சுடர்க் கண்ணானை, மூர்த்தி தன்னை, நாவலனை, நரை விடை ஒன்று ஏறுவானை, நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை, ஆவினில் ஐந்து உகந்தானை, அமரர் கோவை, அயன் திருமால் ஆனானை, அனலோன் போற்றும் காவலனை, கஞ்சனூர் ஆண்ட கோவை, கற்பகத்தை, கண் ஆரக் கண்டு உய்ந்தேனே!. |
|
உரை
|