223 | சிறை ஆர் வரிவண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோக(ன்)னை, மறை ஆன்ற வாய் மூரும் கீழ் வேளூரும் வலி வலமும் தேவூரும் மன்னி அங்கே உறைவானை, உத்தமனை, ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன் தன்னை,- கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகைக் காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே. |