234 | சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய்; திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்; நிலம், துக்கம், நீர், வளி, தீ, ஆனான் கண்டாய்; நிரூபியாய் ரூபியும் ஆய் நின்றான் கண்டாய்; சலம் துக்க சென்னிச் சடையான் கண்டாய்; தாமரையான், செங்கண் மால், தானே கண்டாய்; மலம் துக்க மால்விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே. |