364சீரால் வணங்கப்படுவார் தாமே; திசைக்கு எல்லாம்
                      தேவு ஆகி நின்றார் தாமே;
ஆரா அமுதம் ஆனார் தாமே; அளவு இல்
                      பெருமை உடையார் தாமே;
நீர் ஆர் நியமம் உடையார் தாமே; நீள்வரை வில்
                        ஆக வளைத்தார் தாமே;
பாரார் பரவப்படுவார் தாமே பழனநகர் எம்பிரானார்
                                       தாமே.