| 407 | “சுழித் துணை ஆம் பிறவி வழித் துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே! தூய தெண்நீர் இழிப்ப(அ)ரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் என் துணையே! என்னுடைய பெம்மான்! தம்மான்! பழிப்ப(அ)ரிய திருமாலும் அயனும் காணாப் பருதியே! சுருதி முடிக்கு அணி ஆய் வாய்த்த, வழித்துணை ஆம், மழபாடி வயிரத்தூணே!” என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே. |