882 | சூழும் துயரம் அறுப்பார் போலும்; தோற்றம் இறுதி ஆய் நின்றார் போலும்; ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும்; ஆடல் உகந்த அழகர் போலும்; தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு, தன்மை அளித்த தலைவர் போலும்; ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர்த் தான் தோன்றி ஈசனாரே. |