6.50 திருவீழிமிழலை திருத்தாண்டகம் |
499 | போர் ஆனை ஈர் உரிவைப் போர்வை யானை, புலி அதளே உடை ஆடை போற்றினானை, பாரானை, மதியானை, பகல் ஆனானை, பல் உயிர் ஆய் நெடுவெளி ஆய்ப் பரந்து நின்ற நீரானை, காற்றானை, தீ ஆனானை, நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வத்- தேரானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே சேர்கின்றாரே. |
|
உரை
|