68 | செழு நீர்ப்-புனல் கெடில வீரட்ட(ம்)மும், திரிபுராந்தகம், தென் ஆர் தேவீச்சுரம், கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும், குடமூக்கும், கோகரணம், கோலக்காவும், பழி நீர்மை இல்லாப் பனங்காட்டூரும், பனையூர், பயற்றூர், பராய்த்துறையும், கழுநீர் மது விரியும் காளிங்க(ம்)மும் - கணபதீச்சுரத்தார் தம் காப்புக்களே. |