186செறி கழலும் திருவடியும் தோன்றும் தோன்றும்;
        திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்;
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும்;
    நெற்றிமேல் கண் தோன்றும்; பெற்றம் தோன்றும்;
மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும்;
       மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்;
பொறி அரவும் இளமதியும் பொலிந்து தோன்றும்-
     பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே.