309 | செரு வளரும் செங்கண் மால் ஏற்றினான்காண்; தென் ஆனைக்காவன்காண்; தீயில் வீழ, மருவலர் தம் புரம் மூன்றும் எரி செய்தான் காண்; வஞ்சகர் பால் அணுகாத மைந்தன் தான்காண்; அரு வரையை எடுத்தவன் தன் சிரங்கள் பத்தும், ஐந் நான்கு தோளும், நெரிந்து அலற அன்று திருவிரலால் அடர்த்தவன்காண்-திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே. |