220திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து,
           அவர்கள் தாம் தேடிக் காணார், நாணும்
புரையான் எனப்படுவார் தாமே போலும்; போர்
                ஏறு தாம் ஏறிச் செல்வார் போலும்;
கரையா வரை வில், ஏ, நாகம் நாணா, காலத்தீ
                        அன்ன கனலார் போலும்;
வரை ஆர் மதில் எய்த வண்ணர்
      போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.