6.70 பொது க்ஷேத்திரக்கோவைத்
திருத்தாண்டகம்
701தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி,
                தேவன்குடி, சிராப்பள்ளி, தெங்கூர்,
கொல்லிக் குளிர் அறைப்பள்ளி,
       கோவல்-வீரட்டம், கோகரணம், கோடிகாவும்,
முல்லைப் புறவம் முருகன் பூண்டி,
              முழையூர், பழையாறை, சத்தி முற்றம்,
கல்லில்-திகழ் சீர் ஆர் காளத்தியும்,
              கயிலாய நாதனையே காணல் ஆமே.