924தீ ஆகி, நீர் ஆகி, திண்மை ஆகி, திசை ஆகி, அத் திசைக்கு
                                    ஓர் தெய்வம் ஆகி,
தாய் ஆகி, தந்தையாய், சார்வும் ஆகி, தாரகையும் ஞாயிறும்
                                     தண் மதியும் ஆகி,
காய் ஆகி, பழம் ஆகி, பழத்தில் நின்ற இரதங்கள்
                               நுகர்வானும் தானே ஆகி,
நீ ஆகி, நான் ஆகி, நேர்மை ஆகி, நெடுஞ்சுடர் ஆய்,
                          நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே.