306 | நன்று அருளி, தீது அகற்றும் நம்பிரான்காண்; நால் மறையோடு ஆறு அங்கம் ஆயினான்காண்; மின் திகழும் சோதியான்காண்; ஆதிதான்காண்; வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண்; துன்று பொழில் கச்சி ஏகம்பன் தான்காண்; சோற்றுத்துறையான்காண்-சோலை சூழ்ந்த தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில்-திரு மூலட்டானத்து எம் செல்வன் தானே. |