| 451 | நரை ஆர்ந்த விடை ஏறி, நீறு பூசி, நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து, ஓர் தலை கை ஏந்தி, உரையா வந்து, இல் புகுந்து, பலி தான் வேண்ட, “எம் அடிகள்! உம் ஊர்தான் ஏதோ?” என்ன, “விரையாதே கேட்டியேல், வேல்கண் நல்லாய்! விடும் கலங்கள் நெடுங்கடலுள் நின்று தோன்றும், திரை மோதக் கரை ஏறிச் சங்கம் ஊரும், திரு ஒற்றியூர்” என்றார்; தீய ஆறே!. |