484 | நிலையவன் காண்; தோற்று அவன் காண்; நிறை ஆனான் காண்; நீர் அவன் காண்; பார் அவன் காண், ஊர் மூன்று எய்த சிலையவன் காண்; செய்ய வாய், கரிய கூந்தல், தேன்மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண்; கலையவன் காண்; காற்று அவன் காண்; காலன் வீழக் கறுத்தவன் காண்; கயிலாயம் என்னும் தெய்வ- மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |