315 | நீப்ப(அ)ரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண்; நெஞ்சே! “நித்தம் ஆகச் சேப் பிரியா வெல் கொடியினானே!” என்றும், “சிவலோக நெறி தந்த சிவனே!” என்றும், ‘பூப் பிரியா நான்முகனும் புள்ளின் மேலைப் புண்டரிகக் கண்ணானும், “போற்றி!” என்னத் தீப்பிழம்பு ஆய் நின்றவனே! செல்வம் மல்கும் திரு ஆரூரா!’ என்றே சிந்தி, நெஞ்சே!. |