397நீர் ஆகி, நெடுவரைகள் ஆனான் கண்டாய்; நிழல்
            ஆகி, நீள் விசும்பும் ஆனான் கண்டாய்;
பார் ஆகி, பௌவம் ஏழ் ஆனான் கண்டாய்; பகல்
             ஆகி, வான் ஆகி, நின்றான் கண்டாய்;
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய்;
        அணு ஆகி, ஆதி ஆய், நின்றான் கண்டாய்;
வார் ஆர்ந்த வனமுலையாள் பங்கன் கண்டாய்
                மழபாடி மன்னும் மணாளன் தானே.