175 | பச்சைநிறம் உடையர்; பாலர்; சாலப் பழையர்; பிழைஎல்லாம் நீக்கி ஆள்வர்; கச்சைக் கதம் நாகம் பூண்ட தோளர்; கலன் ஒன்று கை ஏந்தி, இல்லம் தோறும் பிச்சைக் கொள நுகர்வர்; பெரியர், சால; பிறங்கு சடைமுடியர்; பேணும் தொண்டர் இச்சை மிக அறிவர்; என்றும் உள்ளார்-இடைமருது மேவி இடம் கொண்டாரே. |