420பரவிப் பலபலவும் தேடி, ஓடி, பாழ் ஆம் குரம்பை
                          இடைக் கிடந்து, வாளா
குரவி, குடிவாழ்க்கை வாழ எண்ணி, குலைகை தவிர்,
                        நெஞ்சே! கூறக் கேள், நீ;
இரவிக்குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த
                           கோடி அமரர் ஆயம்
நிரவிக்க(அ)அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா
                   நினைந்தக்கால் உய்யல் ஆமே.