536பஞ்சு அடுத்த மெல்விரலாள் பங்கர் போலும்; பைந்நாகம்
                  அரைக்கு அசைத்த பரமர் போலும்;
மஞ்சு அடுத்த மணி நீல கண்டர் போலும்; வட கயிலை
                    மலை உடைய மணாளர் போலும்;
செஞ்சடைக்கண் வெண் பிறை கொண்டு அணிந்தார்
    போலும்; திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும்;
அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும்
          அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.