902பாரிடங்கள் உடன் பாடப் பயின்று நட்டம் பயில்வானை,
                               அயில்வாய சூலம் ஏந்தி
நேரிடும் போர் மிக வல்ல நிமலன் தன்னை, நின்மலனை,
                 அம் மலர் கொண்ட (அ)அயனும் மாலும்
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம்
              பரந்தானை, நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும்
சீர் எறும்பியூர் மலைமேல் மாணிக்கத்தை, செழுஞ்சுடரை,
                     சென்று அடையப் பெற்றேன், நானே.