| 945 | பாரிடங்கள் பல கருவி பயிலக் கொண்டார்; பவள நிறம் கொண்டார்; பளிங்கும் கொண்டார்; நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார்; நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார்; வார் அடங்கு வனமுலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார்; வளையும் கொண்டார்; ஊர் அடங்க, ஒற்றி நகர் பற்றிக் கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே. |