6.20 திருநள்ளாறு
திருத்தாண்டகம்
201ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று(வ்) அல்லாத
                  சொல் உரைக்கத் தன் கை வாளால்
சேதித்த திருவடியை, செல்ல நல்ல சிவலோக நெறி
                            வகுத்துக் காட்டுவானை,
மா மதியை, மாது ஓர் கூறு ஆயினானை, மா மலர்மேல்
                          அயனோடு மாலும் காணா
நாதியை, நம்பியை, நள்ளாற்றானை, -நான் அடியேன்
                   நினைக்கப் பெற்று உய்ந்த ஆறே!.