| 384 | பெண் ஆண் பிறப்பு இலியாய் நின்றாய், நீயே; பெரியார்கட்கு எல்லாம் பெரியாய், நீயே; உண்ணா அருநஞ்சம் உண்டாய், நீயே; ஊழி முதல்வனாய் நின்றாய், நீயே; கண் ஆய் உலகு எலாம் காத்தாய், நீயே; கழல்சேவடி என்மேல் வைத்தாய், நீயே; திண் ஆர் மழுவாள் படையாய், நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!. |