| 330 | பொரும் கை மதகரி உரிவைப் போர்வையானை, பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை, கரும்பு தரு கட்டியை, இன் அமிர்தை, தேனை, காண்பு அரிய செழுஞ்சுடரை, கனகக் குன்றை, இருங் கனகமதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை, இமையோர் ஏத்தும் அருந்தவனை, அரநெறியில் அப்பன் தன்னை, அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே!. |