133மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி,
      “மறைக்காட்டேன்” என்று ஓர் மழலை பேசி,
செறி இலங்கு திண்தோள்மேல் நீறு கொண்டு,
               திருமுண்டமா இட்ட திலக நெற்றி
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று,
           நெடுங்கண் பனி சோர, நின்று நோக்கி,
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து, பூதம் சூழ,
        “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே!