341 | மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ? வானவரை வலி அமுதம் ஊட்டி, அந் நாள் நிலை பேறு பெறுவித்து நின்ற நாளோ? நினைப்ப (அ)ரிய தழல் பிழம்பு ஆய் நிமிர்ந்த நாளோ? அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ? அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ? சிலையால் முப்புரம் எரித்த முன்னோ? பின்னோ? திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே. |