| 411 | மின் நேர் இடைபங்கன் நீயே என்றும், வெண் கயிலை மேவினாய் நீயே என்றும், பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும், பூதகண நாதன் நீயே என்றும், என் நா இரதத்தாய் நீயே என்றும், ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும், தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும், நின்ற நெய்த்தானா! என் நெஞ்சு உளாயே. |