505மிக்கானை, குறைந்து அடைந்தார் மேவலானை, வெவ்வேறு
                        ஆய் இரு மூன்று சமயம் ஆகிப்
புக்கானை, எப்பொருட்கும் பொது ஆனானை, பொன்னுலகத்தவர்
                        போற்றும் பொருளுக்கு எல்லாம்
தக்கானை, தான் அன்றி வேறு ஒன்று இல்லாத் தத்துவனை,
                                தடவரையை நடுவு செய்த
திக்கானை, திரு வீழிமிழலையானை, சேராதார் தீநெறிக்கே
                                        சேர்கின்றாரே.