| 128 | முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி, முளைத்திங்கள் சூடி, முந்நூலும் பூண்டு, ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்று ஒன்றா எண்ணுகின்றார்; மற்று ஒருவர் இல்லை, துணை எனக்கு; மால் கொண்டால் போல மயங்குவேற்கு, புற்று அரவக் கச்சு ஆர்த்துப் பூதம் சூழ, “புறம்பயம் நம் ஊர்” என்று போயினாரே! |