| 486 | முன்னவன் காண், பின்னவன் காண், மூவா மேனி முதல் அவன் காண், முடிவு அவன் காண், மூன்று சோதி அன்னவன் காண், அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண், சேயவன் காண், அளவு இல் சோதி மின் அவன் காண், உரும் அவன் காண், திருமால் பாகம் வேண்டினன் காண், ஈண்டு புனல் கங்கைக்கு என்றும் மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலி வலத்தான் காண்; அவன் என் மனத்து உளானே. |