| 749 | முடி கொண்ட வளர்மதியும், மூன்று ஆய்த் தோன்றும் முளைஞாயிறு அன்ன மலர்க்கண்கள் மூன்றும், அடி கொண்ட சிலம்பு ஒலியும், அருள் ஆர் சோதி அணி முறுவல் செவ்வாயும், அழகு ஆய்த் தோன்ற; துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு; சுடர்ச் சோதிக்கடல் செம்பொன் மலை போல், இந் நாள் குடி கொண்டு என் மனத்து அகத்தே புகுந்தார் போலும் குடந்தைக் கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே. |