| 773 | மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன்; வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன்; கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன்; கங்கணமும், அங்கைக் கனலும், கண்டேன்; ஐயம் பல ஊர் திரியக் கண்டேன்; அன்றவன் தன் வேள்வி அழித்து உகந்து, வையம் பரவ இருத்தல் கண்டேன்-வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே!. |