856 | வரை ஆர்ந்த மடமங்கை பங்கன் தன்னை; வானவர்க்கும் வானவனை; மணியை; முத்தை; அரை ஆர்ந்த புலித்தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை; தம்மானை, அடியார்க்கு என்றும்; புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன் தன்னை; ந்துருத்தி மேயானை; புகலூரானை; திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை; சிந்தி, நெஞ்சே!. |