| 121 | விண் ஆனாய்! விண்ணவர்கள் விரும்பி வந்து, “வேதத்தாய்! கீதத்தாய்! விரவி எங்கும் எண் ஆனாய்! எழுத்து ஆனாய்! கடல் ஏழ் ஆனாய்! இறை ஆனாய் எம் இறையே!” என்று நிற்கும் கண் ஆனாய்! கார் ஆனாய்! பாரும் ஆனாய்! கழிப்பாலையுள் உறையும் கபால (அ)ப்பனார், மண் ஆன மாயக் குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே. |