178 | விட்டு இலங்கு மா மழுவர்; வேலை நஞ்சர்; விடங்கர்; விரிபுனல் சூழ் வெண்காட்டு உள்ளார்; மட்டு இலங்கு தார்-மாலை மார்பில் நீற்றர்; மழபாடியுள் உறைவர்; மாகாளத்தர்; சிட்டு இலங்கு வல் அரக்கர் கோனை அன்று செழு முடியும் தோள் ஐந்நான்கு அடரக் காலால் இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார், வென்றி;- இடைமருது மேவி இடம் கொண்டாரே. |