222 | விண்ணோர் பெருமானை, வீரட்ட(ன்)னை, வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை, பெண்ணானை, ஆணானை, பேடியானை, பெரும்பற்றாத்தண் புலியூர் பேணினானை, அண்ணாமலையானை, ஆன் ஐந்துஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான் தன்னை, கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகைக்-காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே. |