Try error :java.sql.SQLException: Closed Resultset: next
276விரைந்து ஆளும் நல்குரவே! செல்வே! பொல்லா
        வெகுட்சியே! மகிழ்ச்சியே! வெறுப்பே! நீங்கள்
நிரந்து ஓடி மா நிலத்தை அரித்துத் தின்பீர்க்கு
       இல்லையே, நுகர் போகம்? யானேல், வானோர்
கரைந்து ஓட வரு நஞ்சை அமுதுசெய்த
              கற்பகத்தை, தற்பரத்தை, திரு ஆரூரில்
பரஞ்சோதிதனை, காண்பேன்; படேன், நும்
   பண்பில்; பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்மி(ன்)னே!.